திரு. சிதம்பரநாதர் திசைவீரசிங்கம் (சிவனடியான்)
(முன்னாள் கணித ஆசிரியர் - யாழ். இந்துக் கல்லூரி)
தோற்றம்: 12 நவம்பர் 1932 - மறைவு: 25 செப்டம்பர் 2025
சீரணி நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாக சபையின் முதும்பெரும் உறுப்பினரும், சமாதான நீதவானும் ஆகிய திரு. சிதம்பரநாதர் திசைவீரசிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் - கனகம்மா தம்பதியினரின் ஏக புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான K.S. சுப்பிரமணியம் (KSS) - பூமணி தம்பதியினரின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாஜினி, காலஞ்சென்ற சியாமினி, பிரேமினி, லோஜினி ஆகியோரின் தந்தையும்,
ரவீந்திரன் (ரவி), சித்தினாயககுமரன் (குமார்), சசிதரன் (சசி) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நாகேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் சகோதரரும்,
குணபாக்கியம், மனோரஞ்சிதம், சந்திரோதயம் ஆகியோரினதும், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், நரேந்திரன், சிறீதரன், சிவக்கொழுந்து, சிந்தாமணி, இராஜரட்ணம் ஆகியோரினதும் மைத்துனரும்,
பவித்திரா, ரம்யா, அபினா, அர்ச்சனா, மிதிலன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது சுதுமலை மனை முற்றத்தில் முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
