திரு. சிதம்பரப்பிள்ளை பரமசாமி
தோற்றம்: 11 ஆகஸ்ட் 1954 - மறைவு: 11 மே 2026
யாழ். கச்சாய் வடக்கு, கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளாம்போக்கட்டி, புளியம் பொக்கணை நாகதம்பிரான் கோவிலடி, வவுனியா (பூந்தோட்டம்), கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சிதம்பரப்பிள்ளை பரமசாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், திரு. கணபதிப்பிள்ளை - கனகாம்பிகை தம்பதியினரின் அருமை மருமகனும்,
அற்புதமலர் (வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாலினி (இலண்டன்), கிருஷன் (Site Engineer NEXUS). கிருசாந்தன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராமகிருஷ்ணன் (இலண்டன்), துவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குலசேகரம், வேலாயுதபிள்ளை, தில்லைநாயகி, மகேஸ்வரி மற்றும் சரஸ்வதி, ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜனுஸ், டிவான்ஸ், கனிஸ், கஜிஸ் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
சாந்தநாயகி, தங்கமலர், கோபாலசிங்கம், தர்மகுலசிங்கம், பரராஜசிங்கம், ரோவனாதேவி, கோணேஸ்வரி, நாகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இல- 10, இனிசியம் வீதி, தெஹிவளையில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் (நிசல செவன - Nisala Sevana) தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
