திரு. சிதம்பரம்பிள்ளை மோகன்

(முன்னாள் லாவண்யா ஜீவலர்ஸ் - மாத்தளை, கோல்ட் பேங்கிங் ஜீவலர்ஸ் - மாத்தளை)

சிதம்பரம்பிள்ளை மோகன்

தோற்றம்: 26 பெப்ரவரி 1975 - மறைவு: 16 மார்ச் 2025

மாத்தளையைச் சேர்ந்த திரு. சிதம்பரம்பிள்ளை மோகன் அவர்கள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் அகாலமரணமானார்.

அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் புதுப்பட்டி கிராமம் முன்னாள் தொட்டகமுவ, பலாபத்வெல, மாத்தளை காலஞ்சென்ற நல்லதம்பியாபிள்ளை - காமாட்சியம்மாள் தம்பதியினரின் மகன்வழி பேரனும், திருச்சி மாவட்டம் புதுப்பட்டி கிராமம் காலஞ்சென்ற தாயுடமான்பிள்ளை - சரஸ்வதி தம்பதியினரின் மகள்வழி பேரனும், 

காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை (தொட்டகமுவ) - ராசம்மாள் தம்பதியினரின் மூத்த மகனும்,

சி.குமார் (தேவி ஜீவலர்ஸ் - மாத்தளை, ரொஹன்ஸ் - மாத்தளை), சி. நகுலேஸ்வரன் (நகுல் ஜீவலர்ஸ் - மாத்தளை), சி.சிவகாமி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பெ.பிரபாஹர் (ஈடன் ஜீவலர்ஸ் - வௌ்ளத்தை) அவர்களின் மைத்துனரும்,

சுகந்தினி (சுபா), முதுர்ஷினி ஆகியோரின் கொளுந்தனாரும்,

பவனேஷ், அனுக்‌ஷன் ஆகியோரின் மாமாவும்,

ரித்திகேஷ், டக்‌ஷனா, தேவிஶ்ரீ, யுகேஷ், மொழிஹாஷினி, லோக்‌ஷிதன், ரேஷாஷினி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-03-2025 அன்று இரவு 8.00 மணி முதல் இல-07, வட்ட வீதி, மாத்தளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-03-2025 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் புகழுடல் மாத்தளை களுதாவளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படடது.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2025 04:00)