திரு. சிதம்பரப்பிள்ளை அருணாசலம்
(ஓய்வுநிலை முகாமையாளர், சங்கானை பலநோக்கு கூட்டுடிறவு சங்கம்)
தோற்றம்: 15 பெப்ரவரி 1939 - மறைவு: 26 ஆகஸ்ட் 2024
யாழ். பறாளாய் வீதி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை அருணாசலம் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-ஆச்சிமுத்து தம்பதியினரின் பாசமிகு புத்திரனும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு-நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுந்தரம்பிள்ளை-அமிர்தம் தம்பதியினரின் பெறாமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
முகுந்தன் (பொறியியலாளர்-அவுஸ்ரேலியா), சேந்தன் (விரிவுரையாளர்-வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி), அமிர்தகணேசன் (கணிய அளவியலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிவேதிகா (பல் மருத்துவர்-அவுஸ்ரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவரர்களான மார்க்கண்டு, பொன்னம்மா, முருகவேல், கமலாதேவி, இராமச்சந்திரன் மற்றும் மீனாம்பாள் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசுப்பிரமணியம், அன்னப்பிள்ளை, சரோஜினிதேவி, இராசலட்சுமி, கோவிந்தம்மா, இராசபட்சம், உமாதேவி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஓவியா. சத்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அம்பலவாணர் லக்சிகா அவர்களின் பாசமிகு அப்புவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-08-202 புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக நண்பகல் 12:00 மணியளவில் திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
"முத்தகம்"
சுழிபுரம் கிழக்கு , சுழிபுரம்.
www.tamilthakaval.org
