திரு. சிதம்பரப்பிள்ளை நித்தியானந்தன்
(ஆனந்தா ஸ்டோர்ஸ் உரிமையாளர் - நொச்சிகாமம்)
தோற்றம்: 21 ஏப்ரல் 1954 - மறைவு: 16 ஜூன் 2025
யாழ். காரைநகர் அறுகம்புலத்தை பிறப்பிடமாகவும், இல-12, 2/4, காசல் ஒழுங்கை, பம்பலப்பிட்டி கொழும்பு-04 இனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை நித்தியானந்தன் அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மாலா, மயூரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
காலஞ்சென்ற விசாகன், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிரை, சன்வி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ரங்கநாதன், தர்மலிங்கம், ஜெகநாதன், சிவசிதம்பரம் (இலண்டன்), சிவகலை, காலஞ்சென்ற மகாதேவன், செல்வராஜா (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
யோகலிங்கம், மகேஸ்வரி, இராஜேஸ்வரி, பத்மாவதி, சிவஞானம், ஞானசோதி, காலஞ்சென்ற தவராசா, கருணாகரன் (இலண்டன்), அருணகிரிநாதன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 18-06-2025 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-06-2025 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
