திரு. அம்பலவாணர் சிற்றம்பலம் தர்மலிங்கம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி)
தோற்றம்: 01 செப்டம்பர் 1931 - மறைவு: 25 மே 2025
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குழி, நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் சிற்றம்பலம் தர்மலிங்கம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா - Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் - தங்கம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சேதுராஜா - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சாயினி, சாயிராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரமூர்த்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பார்த்திபன், சர்மிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலிஙகம், நாகேஸ்வரி, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில் ஞானவதி, வீரசுப்பிரமணியம், இராசமலர், ராசம், காலஞ்சென்ற மகேஸ்வரி, கிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும். 28-05-2025 புதன்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
