திரு. சிற்சபேசன் பிரஷாந்தன்

சிற்சபேசன் பிரஷாந்தன்

தோற்றம்: 10 ஜனவரி 1973 - மறைவு: 17 ஜூன் 2025

யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், இங்கிலாந்து மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிற்சபேசன் பிரஷாந்தன் அவர்கள் 17-06-2025 அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகதாஸ் - சிவபாதநேசம் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா - நேசமணி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிற்சபேசன் - நிர்மலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சரவணமுத்து - கெளரகெளரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கங்கா அவர்களின் ஆருயிர் கணவனும்,

பிரவீன், பிரீத்திகா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

அலக்ஸஸின் அன்பு மாமனாரும்,

அமீனாவின் பாசமிகு தாத்தாவும்,

சதீஸ்குமார், துஷிதா, விஜிதா ஆகியோரின் அன்பு சகோதரனும்,

சாந்தகுமார், டெக்லன், துஸ்யந்தன், கவிதா, காலஞ்சென்ற ரஜீந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாருகி, சாரங்கி, சர்வினா, சுருதி, சஞ்சீவ், மதுஜானா ஆகியோரின் அன்பு மாமனாரும், 

சர்வீனா , மேனன், ரஜீன், சர்ஜீவன், ஜனனன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

சஜீந்திரனின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2025 சனிக்கிழமை மாலை 06:00 - 09:00 மணி வரையும், 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 - 11:00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc.(121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 01:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2025 04:00)