திரு. சிற்றம்பலம் துரைராசா
(முன்னாள் தலைவர் பிரதேசசபை சாவகச்சேரி, கொத்தணி அதிபர் வரணி மத்திய கல்லூரி, அதிபர் முரசுமோட்டை முருகானந்தக் கல்லூரி,கொத்தணி அதிபர் அக்கராயன் ம.வி, அதிபர் பூநகரி ம.வி, ஆசிரியர் யாழ் சாவகச்சேரி இந்துக்கல்)
தோற்றம்: 17 ஏப்ரல் 1938 - மறைவு: 19 ஜனவரி 2026
யாழ். கரம்பைக்குறிச்சி வரணியைப் பிறப்பிடமாகவும், இடைக்குறிச்சி வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிற்றம்பலம் துரைராசா அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று தனது 88 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் - அபிராமி தம்பதியினரின் மூத்த பாசமிகு மகனும்,
கதிரித்தம்பி வாத்தியார் - பாறுபதிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உமாமகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
திருச்செல்வராசா (பொறியியலாளர், இலண்டன்), செல்வராணி, காலஞ்சென்ற தயானந்தராசா (ஞானவேல்,மாவீரர்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கமலம் (ஓய்வுபெற்ற ஆசிரியை), வாரித்தம்பி (ஓய்வுபெற்ற பதிவாளர் நீதிமன்றம்), மனோன்மணி, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராசசிங்கம் (சகலன், ஓய்வுபெற்ற பதிவாளர் நீதிமன்றம்),
திருக்குமரன் (இலண்டன்), செந்தில்குமரன் (நோர்வே), சியாமளா (பல் மருத்துவர், இலண்டன்), இளங்குமரன் (விரிவுரையாளர், யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி), குன்றக்குமரன் (இயந்திரவியலாளர்), காலஞ்சென்ற இராசக்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீரஞ்சினி (இலண்டன்), கௌசலை (நோர்வே), தாமோதரன் (பொறியியலாளர், இலண்டன்), மேகலா (ஆசிரியை - யாழ். கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை), மதிவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பலராம், சீத்தாராம், லக்ஸ்மன், மதுஷன், சௌமியா, கவின், ராம்குமரன், மகிழினி, கவின்குமரன், புகழினி, அபிஷா, மியூனா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2026 புதன்கிழமை காலை 8.00 மணியளவில் இடைக்குறிச்சி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொடிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
