திரு. சிற்றம்பலம் ஆறுமுகம் மாசிலாமணி

(ஓய்வுபெற்ற சிறாப்பர் - கொழும்பு மாநகரசபை, ஆங்கில ஆசிரியர், சமாதான நீதவான்)

சிற்றம்பலம் ஆறுமுகம் மாசிலாமணி

தோற்றம்: 21 ஜூலை 1933 - மறைவு: 14 மே 2025

யாழ். வடமராட்சி துன்னாலை பொன்னந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வௌ்ளவத்தை ஹம்டன் லேனை வசிப்பிடமாகவும் கொாண்ட திரு. சிற்றம்பலம் ஆறுமுகம் மாசிலாமணி அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் (சட்டத்தரணி) - செல்வரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற சுமங்கலவதி அவர்களின் அருமைக் கணவரும்,

இந்திரசேனன் (ஜக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான இந்திரதாசன் (ஆங்கில ஆசிரியர்), இந்திரமோகன் (Charted Accountant) மற்றும் இந்திரநேசன் (Assitant Secetary - SLAS Cabinet Office), இந்திரலதா (கணித ஆசிரியை - St. Anthony's Boys College - Col-13 ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருட்செல்வி, நிர்மலா, வசந்தகுமாரி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுசனன், ஹரிசன், இந்துஜா, காவியா, அபிநயா, கஜானந் ஆகியோரின் அருமைப் பேரனும், 

காலஞ்சென்றவர்களான மதியாபரணம், திருச்செல்வம், திருச்சடை, திலகவதி, திருஞானசுந்தரம், மோட்சியவதி, பாக்கியநாதன் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், ஜெயநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2025 04:00)