யாழ். காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிற்றம்பலம் பரமேஸ்வரி அவர்கள் 28-13-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் விசாலாட்சி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஓவசியர் தில்லைநாதன் (பிரித்தானியா), ஸ்ரீஸ்கந்தராஜா (பிரித்தானியா) ஆகியோரின பாசமிக்க தாயாரும்,
கிருஸ்ணதேவி, சதீஸா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீப், உசா, சிந்து, சுகன்யா, இந்துஜன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவராஜா ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம்மா, இராசம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் களபூமி தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

