திருமதி. சிற்றம்பலம் இராசம்மா

சிற்றம்பலம் இராசம்மா

தோற்றம்: 05 ஏப்ரல் 1932 - மறைவு: 09 ஆகஸ்ட் 2026

யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடையை (யாதம்பை) வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சிற்றம்பலம் இராசம்மா அவர்கள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமப்பிள்ளை - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கந்தையா - இராமாத்தை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, அமுதம்மா, கனகரட்ணம் மற்றும் இராசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கந்தசாமி நாகேஷ்வரி (வேலுப்பிள்ளை கடை) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கந்தசாமியின் அன்பு மாமியும்,

கனடாவைச் சேர்ந்த பாஸ்கரன் (சுபாஜினி), விஜிதரன் (றொமேஷினி), துஷ்யந்தினி (ஜெயப்பிரதாப் ) ஆகியோரின் அம்மம்மாவும்,

கனடாவைச் சேர்ந்த நெவின், ரியோ, ஹசினா, ஹரிணி , மகுக்கா, பிரறினா, பிரக்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2026 வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2026 00:00)