திரு. சிவபாலசிங்கம் செகராஜசிங்கம்

சிவபாலசிங்கம் செகராஜசிங்கம்

தோற்றம்: 22 பெப்ரவரி 1947 - மறைவு: 29 மே 2025

யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Vancouver, Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாலசிங்கம் செகராஜசிங்கம் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், செகராஜசிங்கம் - சிவகாமி தம்பதியினரின் அன்பு மகனும், தம்பிமுத்து - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மங்கை அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீவன், மேனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஹானிஜா, பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவலோகநாதன், குணசிங்கம், ரவிச்சந்திரா, ஜெயச்சந்திரா, சிவச்சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராதேவி, தவராஜா, சிவராஜா, எலிசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தூரன், சுமித்ரா, அபிராமி, செழியன், சேந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பவித்ரா, துஷிகா, சஹானா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சாதனா, சாகித்யா, கீர்த்திகா, ஆதவன், ஹாஷனா, ஆதித்யா, அனுஷ்கா, கோவர்தன், வருணா, தன்விகா, சித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2025 04:00)