அமரா். சிவகஜனி சிவலிங்கம்

சிவகஜனி சிவலிங்கம்

தோற்றம்: 27 நவம்பர் 1979 - மறைவு: 21 மார்ச் 2026

யாழ் இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரா். சிவகஜனி சிவலிங்கம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், சின்னத்துரை சிவலிங்கம் (ஒட்டுசுட்டான் சிவன் ஸ்ரோர் - உரிமையாளர்) - அன்னலட்சுமி தம்பதயினரின் ஏகபுத்திரியும்,

சிவகரன் (கனடா), சிவகஜன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜனனி (கனடா), சனார்த்தனி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

நிலானன், அட்சயன், யஸ்வினா, சஸ்வினா (கனடா) ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2026 00:00)