Mr. Sivaganam Ragunathan

(யாழ். மணிக்குரல், சாவகச்சேரி கவிஸ்டன், யாழ் FM சேவை ஆகியவற்றின் அறிவிப்பாளர், போட்டோ ரகுப்பிரியா புகைப்பட கலையக - உரிமையாளர், துளிர் நிறுவன - இயக்குனர், Xpert Medics - ஆலோசகர்)

Sivaganam Ragunathan

Date of Birth: 20 July 1952 - Deceased: 12 August 2025

யாழ். மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவஞானம் ரகுநாதன் அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் - சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - அன்னம் தம்பதியினரின் மூத்த மருமகனும்,

சுதர்ஜனா (சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுசுதன், பிரியா, அனுப்பிரியா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

பக்தகௌரி, காலஞ்சென்ற பகீரதன், தர்மசீலன் (கஜன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெய்சாய்நிகேதன், கிஷோதனன் (கிஷாத்), கவிலாஷி (கவிஷி) ஆகியோரின் பாசமிக்க பேரனும்,

காலஞ்சென்ற பாலசரஸ்வதி, செல்வராணி, குணநாதன், காலஞ்சென்ற சிவலோகநாதன், சற்குணநாதன், சிவபாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற ராசரத்தினம், தவராஜசேகரம், ரத்னசோதி, வவா, நிமலாதேவி (சுபா), குணரூபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது தாயாரின் மட்டுவில் தெற்கு இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் நெனியன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2025 04:00)