திருமதி. சிவஞானவதி நடராசா
மறைவு: 07 ஆகஸ்ட் 2024
யாழ். தெல்லிப்பளை கட்டுவனை பிறப்பிடமாகவும், கனடாவில் Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானவதி நடராசா அவர்கள் 07-08-2024 புதன்கிழமை மதியம் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேவையர் சின்னப்பு-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற A. T. நடராஜா (முன்னாள் அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தனி-உமா (கனடா), நளாயினி-பபி (கனடா), கெளதமி - கெளதா (கனடா), நந்திவர்மன்-மோகன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இசைஞானவதி, புனிதவதி (நியூசிலாந்து), ஆலாலசுந்தரம் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வரட்ணம் (முன்னாள் CTBC முகாமையாளர்), சிவசோதி (இளயபாரதி - கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), குகநேசன் (Magna International), ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிமலன், விதுரா, விக்ரா, அஜந், அரவிந், அன்சிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
ஆர்யா, Jayden, Kyla. Micaiah ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
