திருமதி. சிவஞானவதி விசுவலிங்கம்

(ஓய்வுபெற்ற அதிபர் - யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி, முன்னாள் அதிபர் - நவாலி மகா வித்தியாலயம்)

சிவஞானவதி விசுவலிங்கம்

தோற்றம்: 23 டிசம்பர் 1947 - மறைவு: 05 ஜனவரி 2026

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டி திருமதி. சிவஞானவதி விசுவலிங்கம் அவர்கள் 05-01-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு ஏக புத்திரியும், நடராஜா - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

விசுவலிங்கம் (சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,

குமாரசுவாமி அவர்களின்(ஓய்வுபெற்ற பிரதம மருந்தாளர் - யாழ் போதனா வைத்தியசாலை) அன்புச் சகோதரியும்,

மரியதர்சினி (சட்டத்தரணி - கனடா), Dr.சிவதர்சினி (GP - அவுஸ்திரேலியா), கிரிசாந்தி (ஆசிரியை- Khairiya Girls College, கொழும்பு), திருக்குமரன் (சட்டத்தரணி), மணிவண்ணன் (முன்னாள் யாழ் நகர முதல்வர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லக்ஸமன் (Apotex Pharmaceuticals- கனடா), சிவதாசன் (கணக்காளர் - அவுஸ்திரேலியா), Dr.ரமேஸ்குமார் (கொழும்பு தேசிய வைத்தியசாலை), கஜபிரியா (சட்டத்தரணி), அபிராமி (விரிவுரையாளர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஹர்சினி (McMaster University), லக்சிகா (கனடா), கிருத்திக் (அவுஸ்திரேலியா), கவின் (அவுஸ்திரேலியா), சாகித்தியா, அபிரயா, இலக்கியன், தேனுஜா, ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரமநாதன் (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் புகையிரத திணைக்களம்) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 02:00 மணியளவில் திருவுடல் கோம்பையன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர்: +94 21 222 3153
திருக்குமரன் (மகன்):- +94 77 967 9597
மணிவண்ணன் (மகன்):- +94 77 959 9361

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2026 00:00)