Mr Sivagnanam Karthigesu
Date of Birth: 13 February 1947 - Deceased: 14 April 2020
மலேசியா கொலாலம்பூரில் பிறந்தவரும் யாழ். கரவெட்டி மத்தி, கரவெட்டி கிழக்கு கேவளையில் வசித்தவரும் வூப்பெற்றால் ஜேர்மனியில் (Wuppertal Germany) வாழ்ந்து வந்தவருமான திரு சிவஞானம் (அப்பு, Uncle) கார்த்திகேசு அவர்கள் செவ்வாய்க்கிழமை 14.04.2020 அன்று காலை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான கார்த்திகேசு, மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்
சிவநேசம் (ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்
பிருந்தா (இங்கிலாந்து), சுதாகர் (ஜேர்மனி), சுஜீவர் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்
ஜெயகாந்தன் (இங்கிலாந்து), சுஜிதா (ஜேர்மனி), சண்முகப்பிரியா (ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்
தமிழோவியன், யாழ்நிலா, யாழிசை ஆகியோரின் அன்புப் பேரனும்
தேவி (மலேசியா), காலஞ்சென்ற புஸ்பராணி,புனிதவதி (இலங்கை), குகதாசன் (டென்மார்க்),
கணேசதாசன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:-
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2020 09:55)
