திருமதி. சிவஞானவதி ஏரம்பமூர்த்தி

சிவஞானவதி ஏரம்பமூர்த்தி

தோற்றம்: 22 பெப்ரவரி 1946 - மறைவு: 18 ஜூலை 2026

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கையில் சுழுபுரம், பன்னாலை ஆகிய இடங்களில் வாழ்ந்து பின்னர் கொழும்பு வெள்ளவத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திருமதி. சிவஞானவதி ஏரம்பமூர்த்தி அவர்கள் 18-07-2026ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை ஏரம்பமூர்த்தி (சமாதான நீதவான், மாவட்ட அதிகாரி, அஞ்சல் துறை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லம்மா தம்பதியரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவசங்கரப்பிள்ளை, பார்வதி தம்பதியரின் அன்பு மருமகளும்,

சகாலஞ்சென்றவர்களான  சிவதாசன், சிவநேசன், மற்றும் சிவயோகவதி, காலஞ்சென்ற நீலாதேவி, மற்றும் சாந்திமணி, மனோகரன், வீமதேவன் ஆகயோரின் பாசமிகு சகோதரியும்,

ரகுவதனா, தேவகி, நிரந்தினி, ரமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரேஸ், யோகசந்திரன், அருள், சுகனியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனோஜன், ரிஷி, அர்ஷ்விந், சினேகா, ஆகாஷ், அபினாஷ், விஷால், கரீஸ், ஆதிரன்,விபேக்கா, மகீஷா, கம்சிஜா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

அன்வித் அவருகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-07-2026ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 25-07-2026ம் திகதி சனிக்கிழமை  காலை 8:30 மணிமுதல் இறுதிச்சடங்குகள் இடம்பெற்று பின்னர் மதியம் 1:00 மணிக்கு தகனக்கிரிகைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்,
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2026 01:22)