திரு. சிவகுரு கந்தசாமி

(ஓய்வுபெற்ற இலங்கை ரெலிகோம் உத்தியோகத்தர்)

சிவகுரு கந்தசாமி

தோற்றம்: 31 ஜனவரி 1959 - மறைவு: 11 ஆகஸ்ட் 2026

யாழ் கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுரு கந்தசாமி அவர்கள் 11-08-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவகுரு, தெய்வானை தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,

காலஞ்சென்ற முருகேசம்பிள்ளை, ஜெகதீஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவசங்கரி, கௌரிசங்கரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கமணி, வேலாயுதம், புவனேஸ்வரி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதர்ரும்,

திவ்யலோஜினி, சுகந்தி, சிசீலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார் .

அன்னாரின் பூதவுடல் 12-08-2026ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3:30 மணி முதல் இரவு 9:00  வரையும், மறுநாள் 13-08-2026ம் திகதி வியாழக்கிழமை  இல 561 காலிவீதி கல்கிசையில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2026ம் திகதி வியாழக்கிழமை  அன்று நடைபெறும்.

மேலதிக விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2026 16:49)