திரு. சிவகுரு பரமேஸ்வரன்
(ஓய்வுபெற்ற தபாலதிபர் - புத்தளம், மருதானை, வௌ்ளவத்தை, கொட்டாஞ்சேனை)
தோற்றம்: 10 ஜூன் 1952 - மறைவு: 06 அக்டோபர் 2024
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தச் சேர்ந்த திரு. சி.பரமேஸ்வரன் அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்வர்களான சிவகுரு-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
புனிதம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷ்மன் (அவுஸ்திரேலியா), ஜதூஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மினி (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
தனபாக்கியவதி (அமெரிக்கா), பங்கையச்செல்வி, விக்னேஸ்வரன் (சுவிஸ்), கெங்கேஸ்வரன் (பிரான்ஸ), புனிதவதி (பிரான்ஸ்), மகேஷ்வரன் (இலண்டன்), சற்குணேஸ்வரன் (ஆசிரியர்-யாழ்ப்பாணம்), துசிமலா (கனடா), ஹேமலா (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 08-10-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-10-2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
