திரு. சிவகுரு இராசகிளி

சிவகுரு இராசகிளி

தோற்றம்: 05 டிசம்பர் 1965 - மறைவு: 13 அக்டோபர் 2026

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவகுரு இராசகிளி அவர்கள் 13-10-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு - சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு மகனும், இரத்தினம் - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அருணாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

இலக்ஷனா (பவுணா), இளவரசன் (தம்பி), செந்தூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவநேசன், யமுனா, பூலோகசுந்தரம் (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராசா, ரோசா, வனஜா, செல்லம், பத்மாவதி, சுதாகரன், ரஞ்சிதம், குமார், ரஞ்சன், சுரேஷ், சுஜிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசம்மா, நல்லம்மா, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, கந்தசாமி மற்றும் இராசதுரை ஆகியோரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-10-2026 வியாழன், 17-10-2026 சனி மற்றும் 18-10-2026 ஞாயிறு தினங்களில் பிற்பகல் 15:00 -16:00 மணி வரை Funérarium des Joncherolles (95 rue Marcel Sembat 93430 Villetaneuse) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதே முகவரியில் 20-10-2026 செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி முதல் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இளவரசன் (மகன்):- +33 767 202 661
செந்தூரா (மகன்):- +33 762 344 204
யமுனா (தங்கை):- +33 695 363 920
ரஞ்சன்:- +33 768 571 921
குமார்:- +33 768 169 685
நரேஷ்:- +33 651 375 489

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2026 00:00)