திரு. சிவாஜி சிவப்பிரகாசம்

சிவாஜி சிவப்பிரகாசம்

தோற்றம்: 22 ஏப்ரல் 1957 - மறைவு: 01 செப்டம்பர் 2025

கண்டியைப் பிறப்பிடமாகவும், இல-30/4, கல்பொத்த வீதி, கொழும்பு-13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவாஜி சிவப்பிரகாசம் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று இரவு 9.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் - சிவகாமி (கம்பளை) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற விஸ்வரத்தினம் - பத்மாவதி (கொட்டாஞ்சேனை) தம்பதியினரின் மருமகனும்,

காயத்திரி அவர்களின் அன்புக் கணவரும்,

சகிந்தர் (கட்டார்), அபிராமி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

மிருளாணி, சாந்தாதேவி, காலஞ்சென்ற ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தம்பியும்,

கனகசபை, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனனும்,

கோபால் (Eastern Trading), மங்கள்ராஜா (கனடா), விஜயரட்ணம் (பிரான்ஸ்), ஶ்ரீதரன், சுப்பிரமணி (கட்டார்) ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற சசிகலா, நளினி (கனடா), பிரியதர்ஷனி (பிரான்ஸ்), சுபோதினி, பாமினி (கட்டார்) ஆகியோரின் மைத்துனரும்,

டோதரா (கட்டார்), ஹரிஹர பிரதாப் நாயுடு (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,

சண்முககுமரன், குமுதினி, வி.குமரன் நாயுடு (Qtley Press), சகிலா குமரன் ஆகியோரின் சம்பந்தியும்,

வினோத் (ICBT), வித்யா, மிருனா, லக்‌ஷி, தனுஷன், பிரசன்னா (அவுஸ்திரேலியா), விக்னேஷ்வரி (இலண்டன்), வித்தியாகரன் (கனடா), கிரிஷாணி (கனடா), லோகதர்ஷனி (பிரான்ஸ்), சசிதரன், அஸ்வந்த் (கனடா), பிரியகரி (இலண்டன்), ஹசிகா, சத்து (கட்டார்) ஆகியோரின் சித்தப்பாவும்,

வினோதினி (அமெரிக்கா), முரளிஹரன், கிருஷாந்தினி ஆகியோரின் தாய் மாமாவும்,

வெண்பா, ருத்ரா, தாரணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2025 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2025 04:00)