Srimathi. Sivakami Vengadesa Sharma

(இளைப்பாறிய ஆசிரியை - மயிலணி சைவ மகா வித்தியாலயம், சுன்னாகம்)

Sivakami Vengadesa Sharma

Date of Birth: 29 December 1937 - Deceased: 27 June 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீமதி. சிவகாமி வெங்கடேச சர்மா அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீதாராம சாஸ்திரிகள் - சீதாலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதக் குருக்கள் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வெங்கடேச சர்மா அவர்களின் அன்பு மனைவியும்,

ராதா (கனடா), ராஜீவி (இலண்டன்), சுஜாதா (கனடா), ஸ்ரீ வேங்கடநாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாசுதேவன் (கனடா), பாஸ்கரன் (இலண்டன்), ஸ்ரீ சாங்கரி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுப்புலக்ஷ்மி, பாலசுப்பிரமணியன், ஜானகி, காலஞ்சென்றவர்களான பார்வதி, சாவித்திரி, யசோதரா, ஸ்ரீ லலிதாபாரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கார்த்தியாயினி அம்மா, சங்கரநாரயண ஐயர், ஹரிஹர சர்மா, சதாசிவ சர்மா, மற்றும் தியாகராஜக் குருக்கள், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜா யோகீஸ், ஷியாமளி, மனஸ்வினி க்ருசாந்தன், ஸாய்ஸ்ரத்தா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சரோஜா, சீதா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2026 00:00)