Mrs. Sivakkolunthu Rasaiya
Date of Birth: 26 August 1940 - Deceased: 02 September 2025
யாழ். புத்தூர் கிழக்கு புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவக்கொழுந்து இராசையா அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி - கற்பகம் தம்பதியினரின் இளைய மகளும்,
இராசலிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
விஸ்ணுகரன் (கனடா), காலஞ்சென்ற சத்தியபாமினி சதீஷ்கரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரூபராணி (கனடா), தனரூபினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜதுஷன், பூமிகா, டனிஷன், மானஷா, யாஸ்வின் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், தங்கம்மா, கனகம்மா மற்றும் சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அந்திரானை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
