திரு. சிவக்கொழுந்து லோகநாதன்

(MSL Construction Proprietor)

சிவக்கொழுந்து லோகநாதன்

தோற்றம்: 10 அக்டோபர் 1948 - மறைவு: 04 மே 2024

யாழ். நீர்வேலி வடக்கு, கேணியடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவக்கொழுந்து லோகநாதன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து - சின்னப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - கணேசம்மா தம்பதியினரின் மருமகனும்,

மகேஸ்வரி - சுசிலா ஆகியோரின் பாசமிகு அன்பு கணவரும்,

சுதர்ஜனன் (சுவிஸ்), சுதாஜினி (Medical Officer - District Siddha Hospital - Jaffna), கிரிஜன் (MSL Construction), நிறோஜனன் (Technical Officer - Road Development Department - Point-Pedro), உஷாஜனனி (S.L.T.B - Karainagar) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வர்ணகுலா (சுவிஸ்), விக்னராஜா (Lanka Tiles - Store Keeper) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆரபியின் (சுவிஸ்) அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதியம்மா, நடராஜா, இலட்சுமிப்பிள்ளை, தியாகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 04:00)