Mr Sivakolunthu Loganathan
(MSL Construction Proprietor)
Date of Birth: 10 October 1948 - Deceased: 04 May 2024
யாழ். நீர்வேலி வடக்கு, கேணியடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவக்கொழுந்து லோகநாதன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து - சின்னப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - கணேசம்மா தம்பதியினரின் மருமகனும்,
மகேஸ்வரி - சுசிலா ஆகியோரின் பாசமிகு அன்பு கணவரும்,
சுதர்ஜனன் (சுவிஸ்), சுதாஜினி (Medical Officer - District Siddha Hospital - Jaffna), கிரிஜன் (MSL Construction), நிறோஜனன் (Technical Officer - Road Development Department - Point-Pedro), உஷாஜனனி (S.L.T.B - Karainagar) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வர்ணகுலா (சுவிஸ்), விக்னராஜா (Lanka Tiles - Store Keeper) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆரபியின் (சுவிஸ்) அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதியம்மா, நடராஜா, இலட்சுமிப்பிள்ளை, தியாகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
