Mr. Sivakolunthu Nagarajah
(Owner - Gajendra Wood Works)
Date of Birth: 24 December 1952 - Deceased: 08 February 2025
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் கோவிலடி மற்றும் இல. 85, ஆடியபாதம் வீதி,கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவக்கொழுந்து நாகராஜா அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா (ஆசிரியை - கோண்டாவில் இந்துக் கல்லூரி), லதா (சுவிஸ்), கேமமாலினி (இலங்கை), கஜேந்திரன், திருக்குமரன் (சவுதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநாதன் (இலண்டன்). தயாநாதன் (சுவிஸ்), இலங்கேஸ்வரி (இலண்டன்), ஞானகுமார் (இலங்கை), பாலேந்திரா, சிவக்குமார் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகலட்சுமி (இலண்டன்), புவனேஸ்வரி (சுவிஸ்), இராஜேந்திரம் (மட்டக்களப்பு), தேவி, புஷ்பகரி, மாலதி ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயக்குமார், துசியந்தன் (சுவிஸ்), சுரேஸ்குமார் (இ.போ.ச), குகரஞ்சினி, கௌசிகா (மருந்து கலவையாளர் - தள வைத்தியசாலை - மூதூர்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டர்ஷான், அக்ஷிதா, கஜந், அகன், மகிழன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கஜன், அபிதா, ஜேன் ஆகியோரின் தாய் மாமனும்,
சிந்து, சுகன்ஜா, வெங்கடேஸ், துஜானா, பவித்திரா, பதுஷா, நிதுஷன், பிரியங்கா, பிரசாந் (அனு), பிரதீக்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது கொக்குவில் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
