திரு. சிவகுமார் அகீபன்

(இலங்கை மின்சார சபை ஊழியர், முன்னாள் வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பனர்)

சிவகுமார்  அகீபன்

தோற்றம்: 22 அக்டோபர் 1994 - மறைவு: 29 அக்டோபர் 2025

யாழ். உரும்பிராய் வடக்கு உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமார் அகீபன் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், சிவகுமார் (முன்னாள் பல்கலைகழக ஊழியர்) - சறோஜாதேவி தம்பதியினரின் கனிஷ்ட அன்பு புத்திரனும்,

விபுலன் (கனடா), லஷ்சிகா (யாழ். பல்கலைக்கழக 3ம் வருட மாணவி -விஞ்ஞான பீடம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-10-2025 வெள்ளிக்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் இருளன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2025 01:07)