Mrs. Sivakumar Kumarykanaga

Sivakumar Kumarykanaga

Date of Birth: 17 November 1961 - Deceased: 22 September 2025

யாழ். Stanly Road   பிறப்பிடமாகவும், கொக்குவில், ஜேர்மனி - Frankfurt, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகுமார் குமாரிகனகா அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - சிவயோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், சிவபூசம் - சிவஞானம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவதர்சி, சிவதர்சன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

சதீஸ் அவர்களின் அன்பு மாமியும்,

கீதாகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, இராமசந்திரா, சுகுமார் மற்றும் யாணா, யோகன், இந்திரா ஆகியோரின் மைத்துனியும்,

செந்தீசன், பிரசாந்த், தர்சாந்த், தர்சாந்தி ஆகியோரின் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-09-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:30 - 9:00 மணி வரையும், 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 - 8:30 மணி வரையும் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2025 04:00)