Mr. Sivakumar Mahesu
Date of Birth: 29 December 1958 - Deceased: 07 June 2026
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, இத்தாலி - Reggio Emilia மற்றும் இலண்டன் - Slough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவகுமார் மகேசு அவர்கள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் - Slough நகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகேசு (ஒய்வுபெற்ற அதிபர், கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம்) - பரமேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வாமதேவன் - செல்வராணி (Montreal, கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வதனி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்தோஷா, சாருகா, சிவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராணி (பிரான்ஸ்), தருமராஜா (Reggio Emilia, இத்தாலி), சுந்தரராஜா (South Hall, இலண்டன்), தனராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமைபாலன் (Slough, இலண்டன்), ஜோசுவா (Slough, இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
ஆதித்தி, ஆரோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
V.T. இளங்கோவன் (பிரான்ஸ்), சுகந்தி (Reggio Emilia, இத்தாலி), தேவகி (Southhall, இலண்டன்), சூரியபாலன் (Toulouse, பிரான்ஸ்), ரஜனி (Dusseldorf, ஜேர்மனி), மணிவண்ணன் (Montreal, கனடா), சிவராஜா (Dusseldorf, ஜேர்மனி), பிரியா (Montreal, கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
"நினைவஞ்சலி"
காலம் கடந்தாலும், உங்கள் நினைவுகள் மட்டும் எங்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
எங்கள் குடும்பத்தின் அன்பு நிறைந்த உறவாகவும், வழிகாட்டியாகவும், அனைவராலும் மதிக்கப்பட்ட நல்லுள்ளமாகவும் வாழ்ந்த நீங்கள், இன்று எம்முடன் இல்லாவிட்டாலும், உங்கள் அன்பும் அரவணைப்பும் எப்போதும் எங்களுடன் பயணித்துக் கொண்டே இருக்கின்றன.
உங்களின் புன்னகை, அக்கறை, அன்பான வார்த்தைகள் மற்றும் அனைவரையும் இணைத்துப் பேணிய உங்கள் பண்புகள் எங்கள் நினைவுகளில் என்றும் அழியாதவையாகும்.
உங்கள் பிரிவு எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக இருந்தாலும், நீங்கள் விட்டுச் சென்ற நல்ல நினைவுகளும், உயர்ந்த வாழ்க்கை முறையும் எமக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
நீங்கள் எம்மை விட்டு நீங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் உயிர்ப்புடன் வாழ்கின்றன. உங்கள் அன்பையும், பாசத்தையும், புன்னகையையும் நாம் என்றும் மறக்கமாட்டோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி - 6.00 மணி வரை Om Funeral Care Ltd (445 Kenton Rd, Harrow HA3 0XY, UK) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-06-2026 வியாழக்கிழமை 9.00 மணி - 11.15 மணி வரை Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre) (Algernon Rd, London NW4 3TA, UK) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
உமைபாலன் (மருமகன்):- +44 788 628 8585
www.tamilthakaval.org
