திரு சிவலிங்கம் சந்திரசேகரன் (சின்னக்கிளி, சந்திரன்)
தோற்றம்: 21 நவம்பர் 1969 - மறைவு: 31 ஜனவரி 2024
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், Montreal, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் 31-01-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம் - பசுபதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற நாகமுத்து - முத்துப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
இலங்கேஸ்வரி (றஜிதா) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
ராகுலன், நிஷா, மிதுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரோகிணி, காலஞ்சென்ற ஜெயசந்திரன் (பெரியதம்பி) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
கனிஸ்டன், யூலியன், யூரேனன், கோபிகிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, சம்சனா, வினுஷன், வினுஷகா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், யோகேஸ்வரி மற்றும் ரட்ணேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, சேந்தா ஆகியோரின் மைத்துனரும்,
சுபாஜினி, விக்னேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
