திருமதி. சிவலிங்கம் நாகேஸ்வரி

சிவலிங்கம் நாகேஸ்வரி

தோற்றம்: 29 ஏப்ரல் 1951 - மறைவு: 18 ஆகஸ்ட் 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் தத்தமங்கலம் கிராமத்தை பூர்வீகமாகவும், ரம்பொடையைப் பிறப்பிடமாகவும், Brampton, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை - செல்லம்பாள் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற பெரியசாமிப்பிள்ளை - மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவதர்ஷனியின் பாசமிகு தாயாரும்,

பாஸ்கரனின் மாமியாரும்,

ஹரிணி, நந்திகா ஆகியோரின் அம்மாயியும்,

காலஞ்சென்ற கோவிந்தசாமிப்பிள்ளை (அம்மன் Steels, சென்னை), தேவராஜ் (New Sterling Pouoilty, நாமக்கல்), கிருஷ்ணவேணி (சென்னை), உலகநாதன் (Proline Tex,கொழும்பு), ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுப்பையா (ரூபகலா டெக்ஸ்) அண்ணியும்,

காலஞ்சென்ற சதாசிவம்பிள்ளை (நோர்வூட்), நேரு (ரம்யா டெக்ஸ்) ஆகியோரின் கொழுந்தியாவும்,

காலஞ்சென்ற மாணிக்கம்பிள்ளை (திருச்சி) - இந்திராணி ஆகியோரின் சம்பந்தியும்,

ஜெகதாம்பாள் (கொழும்பு), ஜானகி (நாமக்கல்), திலகா (கொழும்பு) ஆகியோரின் நாத்தனாரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-08-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 2:00 மணி வரையும், 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல்  12:30 - 4:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2025 04:00)