திரு. சிவலிங்கம் செல்வலிங்கம்
(ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் - புனித மிக்கல் கல்லூரி, மட்டக்களப்பு)
தோற்றம்: 27 மார்ச் 1944 - மறைவு: 03 நவம்பர் 2025
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் செல்வலிங்கம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், வடிவேல் - அன்னலஷ்மி தம்பதியினரின் மருமகனும்,
ஸ்ரீரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
நரேந்திரா, சத்தியேந்திரா, கஜேந்திரா, சுஜேந்திரா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
நிமலினி, பிரவீனா, சிந்துஜா, நிலக்ஷி, நிலூஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனவ்யா, டரேஷ், ஆகீஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற மகாலிங்கத்தின் அருமைச் சகோதரனும்,
துஷாந்தின் பெரியப்பாவும்,
காசிலிங்கம், காலஞ்சென்றவர்களான சரத்சந்திரா, சாந்தரூபி மற்றும் ஸ்ரீயானி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் மாலை 4:00.மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
