திருமதி. சிவலிங்கம்பிள்ளை சியாளம்மை அம்மாள்
தோற்றம்: 17 ஆகஸ்ட் 1940 - மறைவு: 05 ஜூலை 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம் சாத்துடையான் கோத்திரம், நாவலப்பிட்டி சேலம் பிரிட்ஜ்ஜை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலஞ்சென்ற மூ. சிவலிங்கம்பிள்ளை அவர்களின் மனைவி சியாளம்மை அம்மாள் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று நண்பகல் 12:20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஓமந்தூர் காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற மூக்காப்பிள்ளை - சிவகாமி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
சாந்தகுமாரி, சந்திரகுமாரி, நவோதி, ரவிச்சந்திரன், சுமதி, மோகன்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜேந்திரன், காலஞ்சென்ற மகாலிங்கம், சுகுமார், வசந்தன், அகிலா, யோகலட்சுமி ஆகியோரின் பாசமிக்க மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மாள், சண்முகம்பிள்ளை, சின்னப்பிள்ளை, மீனாம்பாள் மற்றும் சிவபாக்கியம், காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பெருமாள்பிள்ளை - விசாலாட்சி அம்மாள், சிதம்பரம்பிள்ளை - சின்னப்பிள்ளை, சுப்பையா - அஞ்சலையம்மாள், சரவணமுத்துப்பிள்ளை - நலமுடன் பரமேஸ்வரி, ஜம்புலிங்கம்பிள்ளை - குஞ்சம்பாள், நலமுடன் மருதப்பிள்ளை - மகாலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,
கிரிஷா, விக்னேஷ், உதேஷ், சாரிகா ஆகியோரின் பாசமிக்க அப்பாயியும்,
விவேகா, சிவாந்தன், அபிஷேகா, பானுஷா, ஹரணி, சயந்தன் ஆகியோரின் அன்புமிகு அம்மாயியும்,
ஹேத்விக், இனியா ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி முதல் (இல - 105/3, தவலசிங்கராம மாவத்தை, கொழும்பு-15) இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-07-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
