திருமதி. சிவமணி குமரகுரு (சிவம் அக்கா)

சிவமணி குமரகுரு (சிவம் அக்கா)

தோற்றம்: 22 மார்ச் 1945 - மறைவு: 25 பெப்ரவரி 2026

யாழ். வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் - குறொய்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவமணி குமரகுரு அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா - காந்திமதிஅம்மா தம்பதியினரின் மூத்த மகளும், பொலிகண்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

குமரகுரு அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகிருஷ்ணன் (கனடா), தயாநிதி, கிருஷ்ணகுமார், புனிதவதி (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சசிரேணுகா (கனடா), இராமச்சந்திரன், ரஜிதா, ஜெயசிங்கம் (அப்பர்-இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சந்திரலிங்கம், வசந்தாதேவி (இலண்டன்), இந்திரலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவானந்தவேல், யோகராணி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

கமலாகுமாரி (கனடா), இராஜகுமார், தயாளகுமாரி (இலண்டன்), சிறிக்குமார் (ஜேர்மனி) ஆகியோரின் பெரிய தாயாரும்,

தனபாலன் (கனடா), நொயலா, தாயுமானவர், சந்திரிகா ஆகியோரின் பெரிய மாமியாரும்,

பிரசாந், பிரதாப், பிவீன் ஆகியோரின் அன்பு அத்தையும் (குண்டுமாமி),

டினேஷ், திரிஷா, ரக்சனா, மதுமிதா, அபிநயா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு அப்பாச்சியும்,

சந்தியா, கிஷோர், சுவேதா, துர்க்கா, துவாரகா, கரிகரன், கலையரசி, ஆகீசன், மகிந்தன் (மயு), வினோ ஆகியோரின் அம்மம்மாவும், 

விஜய், வினோத், வர்சினி, ரோசினி, வாசினி, வினுசன் ஆகியோரின் பெரியம்மம்மாவும்,

இனிஷா, லூக்கா, ரிசிகா, ரியாசன் ஆகியோரின் பெரியப்பாச்சியும்,

அக்சந்த், நிலா, நேஹா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 - 12.30 மணி வரை Tooting & Micham Community Sports Club, (Bishopsford Road, Morden, SM4 6BF) இல் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் திருவுடல் South L0ndon Crematorium (Rowan Road, London, SW16 5JG) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2026 00:00)