Mrs. Sivamani Somasundaram

Sivamani Somasundaram

Date of Birth: 27 May 1933 - Deceased: 15 June 2025

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப்  பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவமணி சோமசுந்தரம் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் . 

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - பார்வதி (நெல்லுகார சங்கரப்பிள்ளை) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி - ராணியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் (மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

சூரியபிரபா, சூரியகாந்தன் (மட்டக்களப்பு), சூரியகலா, சுதாகரன், சுபோசன் (கனடா), காலஞ்சென்றவர்களான சூரியகுமார், சுதர்சன், சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, Ontario) இல் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium located at 2 (Stalwart Industrial Drive, Gormley, ON) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2025 04:00)