திருமதி. சிவநாயகி அற்புதராஜா
மறைவு: 20 ஆகஸ்ட் 2024
யாழ். காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும், உரும்பிராய் முருகன் வீதி கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவநாயகி அற்புதராஜா அவர்கள் 20-08-2024 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவரகளான சின்னதம்பி-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அற்புதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன், காலஞ்சென்ற சுபோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, செல்வநாயகி, தியாகராஜா, நடராஜா, தங்கராஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
ஹரிணி அவர்களின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 21-08-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
