Mr. Sivanesan Kandiah

(இளைப்பாறிய தந்தைசெல்வா தொடக்கநிலை பள்ளி அதிபர்)

Sivanesan Kandiah

Date of Birth: 02 November 1923 - Deceased: 27 August 2025

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவநேசன் கந்தையா அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று தனது 102வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் ஆருயிர் கணவரும்,

கனடாவைச் சேர்ந்த காலஞ்சென்ற குகதாசன், குகபாலன், குகதேவி, குகானந்தி ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

மாலினி (பாமா), பிரியந்தி (விஜி), சுத்தானந்தன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்ஸனா, தாரிகா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

குகானந்-கீர்த்தனி, அருணன், சக்தி, அபிரா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-08-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 01-09-2025 திங்கட்கிழமை நண்பகல்12:30 - 1:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2025 04:00)