திருமதி. சிவநேசன் பரமேஸ்வரி
தோற்றம்: 27 டிசம்பர் 1976 - மறைவு: 19 பெப்ரவரி 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் வேங்கடத்தான் கிராமம் சமயமந்திரி கோத்திரம் - சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவநேசன் பரமேஸ்வரி அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று அதிகாலை 3.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிலாபம் தருமலிங்கம் பிள்ளை - தனலெட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான கடியன்லெனை பெரியசாமி பிள்ளை - வேலூர் அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
சிவநேசன் (புஷ்பா ஸ்டோர்ஸ், கடியன்லெனை) அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தில்குமாரி, விஜயகுமார், காலஞ்சென்றவர்களான உதயகுமார், பொன்னுசாமி, ராஜரட்ணம் மற்றும் அசோக்குமார், செந்தில்வேணி ஆகியோரின் சகோதரியும்,
நடராஜ் அவர்களின் மைத்துனியும்,
ஜெயராணி, காலஞ்சென்ற ரஞ்சிதம், தீபா, சந்திரமதி, நித்தியகுமார், மனோரஞ்சிதம், சுரேஷ்குமார் ஆகியோரின் அண்ணியும்,
நிஷப்தா, அருஷன் ஆகியோரின் சித்தியும்,
தனுஶ்ரீ, தேஜாஶ்ரீ ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-02-2026 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
