திரு. சிவனேஸ்வரன் சிந்துசன் (சுதன்)

சிவனேஸ்வரன் சிந்துசன் (சுதன்)

மறைவு: 11 ஜனவரி 2026

யாழ். புளியங்கூடலைப் பிறபிடமாகவும், பிரான்ஸினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவனேஸ்வரன் சிந்துசன் அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புளியங்கூடலை சேர்ந்த சிவனேஸ்வரன் - பிறேமா தம்பதியினரின் அன்பு மகனும், தயாளன் - சிவலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ராகவி அவர்களின் அன்பு கணவரும்,

சஜீனின் பாசமிகு தந்தையும்,

சிந்துஜா, ஜதுர்ஷன், ஜசிந்தன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

நிரேஞ்சிதன், துஷா, ராகுல், காலஞ்சென்ற ரஜீதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜனுஜன், கிஷோவி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

விகாஷின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 - 4.00 மணி வரையும், 28-01-2026 புதன்கிழமை முற்பகல் 10.30 - 12.30 மணி வரையும் 95 Rue Marcel Sembat- 93430 Villetaneuse இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2026 00:00)