திரு. சிவந்திலிங்கம் தேவராயன்பிள்ளை

(சென்றல் மெடிக்கல்ஸ்,கண்டி-உரிமையாளர்)

சிவந்திலிங்கம் தேவராயன்பிள்ளை

தோற்றம்: 11 ஜனவரி 1944 - மறைவு: 24 நவம்பர் 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் சாலப்பட்டி கிராமம், திரு. தேவராயன்பிள்ளை சிவந்தலிங்கம் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஊட்டுவள்ளி தோட்டம் அக்கரப்பத்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவந்திலிங்கம்பிள்ளை-மாரியாயி அம்மாள் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற ராமசாமிப்பிள்ளை-மூக்காயி அம்மாள் (மன்ராசி பஜார்) தம்பதியினரின் மருமகனும்,

பாலாமணி அவர்களின் அன்புக்கணவரும்,

தனராஜ், சுரேஷ், அசோகன், ஜெயக்குமார் (கண்ணா), உமாகாந்த் ஆகியோரின் அன்பு தந்தையும்,

செல்வகுமாரி, ஒப்லியா, பாமினி, தயானி ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையாப்பிள்ளை, தனலக்‌ஷ்மி மற்றும் துரைசாமிப்பிள்ளை (ராஜூ), யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,

தனுஷா, சர்வேஷ், அஞ்சலிக்கா, மனேஷ், ஹரீஷ், ரித்விக்கா, தியா ஆகியோரின் பாட்டாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 25-11-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் (இல-16, பூர்ணா லேன், கண்டி) இல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-11-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் மஹிய்யாலை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2024 05:00)