திருமதி. சிவபாக்கியம் கதிரேசு

சிவபாக்கியம் கதிரேசு

தோற்றம்: 01 ஜூன் 1937 - மறைவு: 01 அக்டோபர் 2025

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கொழும்பு , Scarbrough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கதிரேசு அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

 தாமு அப்புக்குட்டி - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயராணி, ஜெயராஜ், ஜெயச்சந்திரிகா, காலஞ்சென்ற ஜெயபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலேந்திரா, சாந்தலக்‌ஷ்மி, ஜெகநாதன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், கமலாம்பிகை (பட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், இரத்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகி, சுஜன், அமேந்திரா, நிரோஷன், அஜனா, நிமலன், அஜேதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திபேஷ், ஐஸ்வரியா, சாருஜா, வருண், சக்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டில்லன், சாய் பாலா, லைலா மயூரி, கையா காயத்ரி, சிவேந்திரா, அகிலன், அனிகா, கல்யான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 - 10:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2025 04:00)