திருமதி. சிவபாக்கியம் கந்தசாமி

சிவபாக்கியம் கந்தசாமி

தோற்றம்: 08 அக்டோபர் 1942 - மறைவு: 01 ஜனவரி 2025

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கந்தசாமி அவர்கள் 01-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா - கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

லோகநாயகி, லோசனா (சுவிஸ்), கிரிவேல் (பொதுமுகாமையாளர் - ப.நோகூ.சங்கம், அச்சுவேலி), சோதிவேல் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குஞ்சிதபாதம், ஆறுமுகவேல் (சுவிஸ்), சிவசுதனி (ஆசிரியை - யாழ் கைதடி நுணாவில் அ.த.க. பாடசாலை), கோமகள் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

நரேன் அவர்களின் பெரிய தாயாரும்,

லஷாயினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - முல்லைத்தீவு மாவட்ட செயலகம்), பங்கஜன் (ஆசிரியர் - யா /நெடுந்தீவு மகா வித்தியாலயம்), அபிஷான் (சுவிஸ்), அபினாஷ் (சுவிஸ்), பிரகாஷ் (சுவிஸ்), சாகித்தியன் (யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), ஆருத்தியன் (யாழ் /நுணாவில் அ.த.க பாடசாலை), சாருக்தியன் (யாழ் /நுணாவில் அ.த.கபாடசாலை), லஷ்மிகா (கனடா), தாமிரன் (கனடா), கௌசிகன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - கண்டாவளை பிரதேச செயலகம்),சஞ்சிகா (வ/ பெரியகுளம் அ.த.க.பாடசாலை) ஆகியோரின் பேத்தியும்,

தன்விகா அவர்களின் பூட்டியும்,

செல்வநாயகி, சிவபாதசுந்தரம், காலஞ்சென்றவர்களான குமரேசபசுபதி, பொன்மலர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2025  வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் இடைக்காடு சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2025 04:50)