திருமதி. சிவபாக்கியம் கனகலிங்கம்
தோற்றம்: 01 ஜூன் 1935 - மறைவு: 24 ஜூன் 2024
யாழ். இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாக்கியம் கனகலிங்கம் அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா-இலச்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கொக்கவில் நந்தாவில் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவம்-ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகளும்,
கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், துரைராசா, பொன்னம்மா ஆகியோரின் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம் (சுவிஸ்), கமலாதேவி (இணுவில்), காலஞ்சென்ற தயந்தினி தேவி, இரஞ்சினி (ஆசிரியை- கொ/கொழும்பு மத்திய இந்து மகா வித்தியாலயம்), சிவகரன் (சுவிஸ்), சிவதாசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினேஸ்வரி, சிவபால சுப்பிரமணியம், கணேசலிங்கம் சோமாஸ்கந்த மூர்த்தி, தனுஷா, சிவதர்சினி ஆகியோரின் மாமியாரும்,
பானுகா, பானுசன், பிரியதர்சினி, கஜன், கஜேந்திரன், பியாமிளா, கஜப்பிரியா, கயானன், அபிரன், அருணன், அட்சரா, கிருத்திக்கவிஸ் ஆகியோரின் பாட்டியும்,
கம்சாயினி, சுலக்சன், நயன்ஜா, இசையா, சிவசதுஷன், சிவகார்த்திகன், அத்விக் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 27-06-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
