Mrs. Sivapakkiyam Mahalingam
Date of Birth: 04 September 1943 - Deceased: 22 April 2024
பேராதனை மீவத்துரையைப் பிறப்பிடமாகவும், கல்கிசை இல-8A, வில்லியம் பிளேசை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் மகாலிங்கம் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெங்கடாசலம் - சாந்தாய் அம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சந்தனம் - ராக்கம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சந்தனம் மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேந்திரகுமார் (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற சந்திரகுமார், சுதர்ஷினி (சுவிஸ்), சாந்தகுமார் (ஐக்கிய இராச்சியம்), சுபாஷினி, காலஞ்சென்ற நரேந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரணி (ஐக்கிய இராச்சியம்), நிஷா (கனடா), பிரிதர்ஷினி (ஐக்கிய இராச்சியம்), வரதராஜன் (சுவிஸ்), ஸ்கந்தகுமார் (உமா எண்டபிரைஸ் - ஹட்டன்) ஆகியோரின் மாமியாரும்,
விதுஷ், காஷ்வி, சஷ்மிதா (கனடா), சஹானா, விஷால், ஶ்ரீகாந்த் (சுவிஸ்), சமிதா (சுவிஸ்), அன்ஜெய், ஓவியா, கேஷ், நேஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சாயி, வர்ஷன், ஆரியன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் 24-04-2024 புதன்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
