திரு. சிவபாதசுந்தரம் சுந்தரேசன்

((முன்னாள் ஆசிரியர் St.Henry's College, விரிவுரையாளர் பலாலி ஆசிரியர் கலாசாலை) Bsc, Dip. in. Education)

சிவபாதசுந்தரம் சுந்தரேசன்

தோற்றம்: 18 மார்ச் 1941 - மறைவு: 28 டிசம்பர் 2023

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலையைப் பூர்வீகமாகவும், தலையாழி கொக்குவில், வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் சுந்தரேசன் அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம்பிள்ளை சிவபாதசுந்தரம் (Hospital Secretary), இரத்தினநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

பரம்சோதி மாஸ்டர், செல்வரத்தினம் (தலையாழி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பத்மஜோதி (முன்னாள் முகாமையாளர் இலங்கை வங்கி யாழ்ப்பாணம்-கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சோமபாலன், Dr. வசந்தநாதன், (முன்னாள் Director of Helth Service) ஆகியோரின் இளைய சகோதரரும்,

பத்மதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), அருட்பதி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), Dr. உமாபதி (முன்னாள் Director Estate & Urban Helath) ஆகியோரின் மூத்த சகோதரரும்,

சிவகிருபா, Dr. தவநாதன், யோகநாதன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் சித்தப்பாவும்,

தர்சன், தர்சினி ஆகியோரின் பெரியப்பாவும்,

அருணபிரபு (Accountant), சீரோன், லக்சன், சங்கவி, சியாமி ஆகியோரின் மாமாவும், புவனேஸ்வரி, மனோன்மணி, சிவானந்தஜோதி, இரட்ணஜோதி, ஜெயஜோதி, உருத்திரஜோதி, குணஜோதி, பிரமஜோதி, விமலதேவன், சுகிர்தா, சுசிலா ஆகியோரின் மைத்துனரும்,

அபூர்வனின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2023 05:00)