திருமதி. சிவபத்மராணி பத்மநாதன்
(ஓய்வுபெற்ற விவாக பதிவாளர் - யாழ்ப்பாணம்)
தோற்றம்: 11 ஏப்ரல் 1943 - மறைவு: 25 மே 2026
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், முடமாவடி திருநெல்வேலியை வதிவிடமாகவும், கனடா- Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபத்மராணி பத்மநாதன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா - பொன்னுமுத்தாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குமாரவேலு பத்மநாதன் (இளைப்பாறிய இலங்கை குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரி - Criminal Investigation Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கர் (டென்மார்க்), சியாமினி (கனடா), சிறீதர் சைமன் (கனடா), ஷீலாஜினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விமலசோதி, குலசங்கர், அகிலன் (ஜெயா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
மகிந் - தீபா, மிக்கி - திலாணி, பிரதீப் - சாதனா, பிரியன் - தௌமியா, ஜொனத்தன் - ஸ்வேதா, ஈத்தன், சாருகன் - தனுஜா, கேசினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஜெய்டன், எமலியா, எல்விறா, கேசிகன், மிஸ்சான்ட், பிரவீன், ஹர்ஷ்னி, கல்கி சக்தி, நேகா பார்வதி, மைவா வைஷ்வி, ஐலா பைரவி, தியோ ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாலசுந்தரம் சிவபுஸ்பராணி மற்றும் சிவயோகராணி, சிவநந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
