Mr. Sivapiragasam Sethukavalar

Sivapiragasam Sethukavalar

Date of Birth: 01 August 1953 - Deceased: 23 January 2026

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. சிவப்பிரகாசம் சேதுகாவலர் அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - தங்கமுத்தாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (சிறாப்பர்) - சற்குணமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஆனந்தபவானி அவர்களின் அன்புக் கணவரும்,

பைரவி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

உதயராஜ், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவமலர், ஜெயமலர், சத்திதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழினி, ஒசாளினி, கௌசிகன், ஆதவி, ஆரண், ஆதீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2026 திங்கட்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

கள்ளி வீதி, சங்கரத்தை

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"May his soul rest in eternal peace. May God bless the family. "
- Subramaniam Narthana  (USA, 26/01/2026 18:41)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2026 04:42)