திருமதி. சிவப்பிரகாசம் சவுந்தரம்

சிவப்பிரகாசம் சவுந்தரம்

மறைவு: 01 மே 2024

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், மணற்காடு காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவப்பிரகாசம் சவுந்தரம் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தர் குழந்தைவேலுவின் அன்பு மகளும்,

கோவநிதி முருகேசு - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

முருகேசு சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானந்தன் (பல் பொருள் வாணிபம் - நொச்சிகாமம்), சிவகுமாரன் (அம்பாள் அரிசி ஆலை - சண்டிலிப்பாய்), சிவமலர் (ஆசிரியை - ஶ்ரீநாகராஜா வித்தியாலயம் - வவுனியா), சரவணபவன் (ஜேர்மனி), தேவமலர் ஆகியோரின் தாயாரும்,

நாகேஸ்வரி, கிருஷ்ணரூபி, லோகேஸ்வரன் (நவதானியம் ஸ்டோர்ஸ் - வவுனியா), சிவதர்சினி (ஜேர்மனி), கனகேஸ்வரன் (வியாபாரம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிஷாந், சுலக்‌ஷன், விதுன், செந்தூரன், கபிலன், பவிதரன், கோபிதரன், ஹம்ஷிதரன், சாருகா, கிருஷா, மிதுஸ், தனோஸ், கேசனா, தனனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று 83/6, தஞ்சை லேன், அரசடி வீதி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக நீலகிரி மயானம் பலகாடு காரைநகரிற்கு புகழுடல் காலை 7.00 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2024 04:00)