Mr. Sivappragasam Sivam
Date of Birth: 07 December 1958 - Deceased: 21 February 2026
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 613. நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் சிவம் அவர்கள் 21-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - நகுலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை - சுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திராதேவியின் அன்புக் கணவரும்,
பிரதீஷாவின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மோகனேஸ்வரி, நகுலேஸ்வரி (இலண்டன்), காலஞ்சென்ற காந்தரூபன், சிவகலை (கொழும்பு தேசிய வைத்தியசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லோகநாயகி (கனடா), சற்குணராஜா (செல்லையா கடை, Sellathurai Stores), இந்திராதேவி (கனடா), சுபத்திராதேவி (இலண்டன்), சுரேந்திரராஜா (ஜேர்மனி), சதீஸ்குமார் (STR Electr) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஈஸ்வரப்பிரியா, கீர்த்தனா, துளசிகா, டிலக்ஷன், டிலோஜன், சிறிலக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆருத், அட்சயா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-0-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
